Friday, February 15, 2019

உணவு பரிமாறும் முறை

பரிமாறும் உணவு, வாழை இலை நுனியில் (இடது பக்கம் மேலே) நாம் அதிகம் எடுத்தது கொள்ள கூடாதவைகள் தான் பரிமாறப்படும்.
.
இது நம் தமிழரின் பண்பாடுகளில் ஒன்று.
.
அவைகள் உடம்புக்கு கெடுதல் விளைவிப்பவை. கொஞ்சமாகத் தான் வைப்பார்கள்.
.
அதிகம் நாம் உணவில் எடுத்தது கொள்ளக்கூடாதவைகள், & மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடக் கூடாதவைகள். (ஆனால் நாக்குக்கு அதிக ருசியாக இருப்பவை 😊)
.
உப்பு,
ஊறுகாய் வகைகள்,
அப்பளம்,
வத்தல் வகைகள்,
இனிப்பு வகைகள்,
டீப் fப்ரை வகைகள்,
பொரியல்கள்,
போன்றவைகள் அங்கே வரிசையில் பரிமாறப்படும்.
காலை டிபனில் கூட பூரியை இடது பக்கம் தான் வைப்பார்கள்.
.
இவையெல்லாம் உடல் நலத்திற்காக மறைமுகமாக நம் முன்னோர்கள் நமக்கு கற்று கொடுத்த பாடங்கள்.
.
இன்று நாம் அதை மறந்தோம், உடலில் பல வியாதிகளை வரவழைத்துக் கொண்டோம், அவதிப்படுகிறோம்.