Tuesday, May 1, 2018

தமிழனாக பிறக்க என்ன தவம் செய்தோம்

கோபுரம் கட்டி
உச்சத்தில் செம்பினை நட்டு
வழிபடும் முறையை செய்திடுவோம்
அது இடியை தடுத்து பலர்
குடியை காக்கும் அதிசய
அறிவியல் செய்திடுவோம் ............!
.
கோவில் சுவற்று கருங்கல் எல்லாம்
மின்காந்த அலையை உமிழ்ந்திடுமே
அருகில் அமர்ந்து ஆசனம் இட்டால்
மனதில் ஒருநிலை எனபது கிடைத்திடுமே .!
.
எங்கள் கோவில் மணியின் அதிர்வுகள்
கூட சமநிலை அலைகளை பரப்புமடா
அடித்தவன் காதில் தெறிக்கும் போது
உற்சாக ஊற்று பெருகுமடா .....!
.
கல்லும் முள்ளும் காலுக்கு
மெத்தை சரணம் போட்டு சென்றிடுவோம்
அதில் அக்குபஞ்சர் அறிவியல் முறையில்
இரத்த ஓட்டம் பெருக்கிடுவோம் ........!
.
சாணம் கரைத்து
வீட்டில் தெளித்து
ஆன்டி-பயோடிக் செய்திடுவோம்
நாளும் தூய்மை காத்திடுவோம் .......!
.
மார்கழி பொழியும்
மாக்கோலம் வரைவோம் அதை
ஊர்வன உண்டு பிழைத்திடுமே
இந்த ஊனில் தூயக்காற்று கிடைத்திடுமே .....!
.
ஈர நெற்றியில் காய்ந்த விபூதி
பட்டை அடித்து திரிந்திடுவோம்
தலை நீர் உறிந்து
தலை வலி குறையும்
அதிசயம் தன்னை நடத்திடுவோம் ...........!
.
குனிந்து நிமிர்ந்து பெண்களை எல்லாம்
வேலை செய்ய சொல்லிடுவோம்
இடுப்பு எலும்பு விலக்கம் அடைகையில்
சுக பிரசவம் தன்னை அடைந்திடுவோம் .......!
.
ராமனை ஏமாற்றி
சீதையை மிரட்டி, கடத்திய
ராவணன் தலையில் கொல்லி வைத்தோம்
அன்றே புஷ்பக "விமானம்"
சொல்லி வைத்தோம் ..............!
.
சூரியன்
உதிக்கும் முன்பும்
மறைந்த பின்பும்
உணவை கையில் தொடமாட்டோம்
இரவில் உணவு
ஜீரண குறைவு
அதிலும் அறிவியல் வைத்ததை
சொல்லமாட்டோம் .............!
.
தலையில் கொட்டி
கணபதி வணங்கி அந்நாளை
இனிதாய் தொடங்கிடுவோம்
நினைவாற்றலை நாளும் வளர்த்திடுவோம் .....!
.
சனியின் கண்ணில்
புற ஊதாக்கதிரை கண்டு
அவன் கண்ணை கருப்பு துணியால்
கட்டி வைத்தவன் தமிழனடா .........!
.
நாலாயிரம் நோயை ஒன்றாய் போக்கும்
அதிசயம் அறிந்தவன் தமிழனடா
துளசி மாடம் வீட்டில் வைத்து
வணங்கியது அந்த நோக்கமடா...........!
.
இன்னும் சொல்ல ஆயிரம் உண்டு
என்னிடம் வந்து கேளுமடா
விஞ்ஞானம் மெய்ஞானம்
இரண்டும் கற்ற அறிவியல் மேதை தமிழனடா
என் தாத்தன் பாட்டன் வாய்வழி
சொன்ன ஒற்றை நூல் தான்
உன் அறிவியல் என்பதை உணருமடா ....! 



..
நன்றி:- சித்தர்கள் & நவீன் தமிழன்.

7ம் நம்பர்

7-க்கு இவ்வளவு பெருமையா?
பூரித்து போய் விட்டேன்.... நீங்களும்
கொஞ்சம் படிச்சு பாருங்கள்
.
எண் ஏழின் சிறப்புக்கள்:-
👉 எண் ஏழு (Number 7) பெருமை - இன்று இணையத்தில் உலாவும் போது கண்ணில் பட்ட தகவல் இது. உங்களிடம் பகிர்த்துக் கொள்வதில் மகிழ்ச்சி.
ஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண். ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும். ஏழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும். காலத்தைக் கணிக்கும் முறையில் எண் ஏழு பழங்காலமக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. ஏழு என்பது தமிழ் எண்களில் '௭' என்று குறிக்கபடுகிறது.
.
எண் ஏழின் சிறப்புக்கள்:-
~~~~~~
1). புதிய உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு
இது அறிவிக்கப்பட்ட தேதி 07/07/2007
.
2). எழு குன்றுகளின் நகரம் ரோம்
.
3). வாரத்திற்குமொத்தம் ஏழு நாட்கள்
.
4). மொத்தம் ஏழு பிறவி
.
5). ஏழு சொர்க்கம்(குரான்)
.
6). ஏழு கடல்கள்
'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார்.
.
7). வானவில்லின் நிறங்கள் (VIBGYOR)
.
8). ஏழு வானங்கள். (Qur'an)
.
9). ஏழு முனிவர்கள் (Rishi)
.
10). ஏழு ஸ்வரங்கள் (ச,ரி,க,ம,ப,த,நி)
.
11). ஏழு கண்டங்கள் (Europe, Asia, Africa, North America, South America, Australia, and Antarctica)
.
12). ஆதி மனிதன் Adam மற்றும் Eve ஆகியோரின் பெயர்களில் உள்ள மொத்த எழுத்துக்களின் கூட்டுத்தொகையின் எண்ணிக்கை ஏழு.
.
13). ஒவ்வொரு திருகுறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவும் ஏழுபகுதிகளாக வரும்.
.
14). கண்ணுக்கு புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை ஏழு
(Sun, Moon, Mercury, Mars, Jupiter, Venus and Saturn)
.
15). திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள்,
133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டு தொகையும் ஏழு.
.
16). மேலுலகம் ஏழு
.
17). கீழுலகம் ஏழு
""நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும்
எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப்
பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை
விண் அறிவாளர் விரும்புகின்றாரே""
- திருமூலர் பாடல்.
.
18). திருக்குறளில் "கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
.
19). மொத்தம் ஏழு தாதுக்கள்
.
20). ஏழு செவ்விய போரியல் நூல்கள் - சீனா
.
21). ஏழானது மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஆகும்.
.
22). ஏழு புண்ணிய நதிகள்
.
23). இராமாயணத்திலுள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை ஏழு
.
24). அகப்பொருள் திணைகள் ஏழு
.
25). புறப்பொருள் திணைகள் ஏழு
.
26). சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை ஏழு
.
27). கடை ஏழு வள்ளல்கள்
,
28). சப்த நாடி (சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு)
.
29). "திருவள்ளுவர்" - எழுத்துக்களின் கூட்டுத்தொகையும் ஏழுதான்
.
30). ஏழு அதிர்ஷ்ட தெய்வங்கள்
.
31). ஏழு மலையான் (திருப்பதி, ஆந்திரா)
.
32). மனிதனுடைய தலையிலுள்ள ஓட்டைகளின் எண்ணிக்கை ஏழு
.
33). உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள் ஏழு.
.
34). பெண்களின் பல்வேறு பருவங்கள் ஏழு
பேதை,
பெதும்பை,
மங்கை,
மடந்தை,
அரிவை,
தெரிவை,
பேரிளம் பெண்
.
இணையத்தில் இருந்து copy செய்து இங்கு வெளியிட்ட என் பெயர் இனிசியலுடன் சேர்த்து ஏழு தான். (தி.ச.கந்தசாமி) 
.............
🙏� வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம் 

உழைப்பாளர் தினம் - VOC

8 மணி நேர வேலையை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்தியாவில் முதல் வேலை நிறுத்தம் செய்தவர் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், VOC அய்யா அவர்கள். 


.
இடம் தூத்துக்குடியில் உள்ள மதுரா கோட்ஸ் (,ஹார்வி மில்ஸ், மெஜுரா மில்ஸ், மெஜுரா கோட்ஸ், கோட்ஸ் வயலா என காலத்திற்கு காலம் மாறிய இந்நிறுவனம் , ) 
.
இதற்காக வேலை நிறுத்த நாளில் தன் சொத்தை விற்று தொழிலாளர்களுக்கு உணவளித்த பெருந்தகை.

இவர் ஆற்றிய அரும் பணிகளை, வரலாற்றில் இடம் பெறாமல் பார்த்துக்கொண்டது ஒரு சிறு கும்பல். வெள்ளைக்காரன் இவர் பெயரை கண்டாலே அன்று நடுங்கினான். இன்றும் இங்கிலாந்தில் இந்திய விடுதலை போரில் வ..உ.சி  ( VOC ) பெயர் உள்ளது. அனால் நமது நாட்டில் மட்டும் இவரின் பெயரை சொன்னால் தமிழகத்தை தவிர வேறு எங்கும் யாருக்கும் தெரியாது. அந்தளவு இவரின் தியாகத்தை மூடி மறைத்து விட்டனர்.   


இந்நாளில் அவரை நினைவில் கொள்வோம்.