Tuesday, May 1, 2018

உழைப்பாளர் தினம் - VOC

8 மணி நேர வேலையை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்தியாவில் முதல் வேலை நிறுத்தம் செய்தவர் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், VOC அய்யா அவர்கள். 


.
இடம் தூத்துக்குடியில் உள்ள மதுரா கோட்ஸ் (,ஹார்வி மில்ஸ், மெஜுரா மில்ஸ், மெஜுரா கோட்ஸ், கோட்ஸ் வயலா என காலத்திற்கு காலம் மாறிய இந்நிறுவனம் , ) 
.
இதற்காக வேலை நிறுத்த நாளில் தன் சொத்தை விற்று தொழிலாளர்களுக்கு உணவளித்த பெருந்தகை.

இவர் ஆற்றிய அரும் பணிகளை, வரலாற்றில் இடம் பெறாமல் பார்த்துக்கொண்டது ஒரு சிறு கும்பல். வெள்ளைக்காரன் இவர் பெயரை கண்டாலே அன்று நடுங்கினான். இன்றும் இங்கிலாந்தில் இந்திய விடுதலை போரில் வ..உ.சி  ( VOC ) பெயர் உள்ளது. அனால் நமது நாட்டில் மட்டும் இவரின் பெயரை சொன்னால் தமிழகத்தை தவிர வேறு எங்கும் யாருக்கும் தெரியாது. அந்தளவு இவரின் தியாகத்தை மூடி மறைத்து விட்டனர்.   


இந்நாளில் அவரை நினைவில் கொள்வோம்.

No comments:

Post a Comment